கலைகுருசிலும் கலையுலக வாழ்வும் ......

பிறப்பு
ஈழ மரபு வழித்தாயகத்தின் வடபுலமாய் யாழ் மாநகரம் அமைந்திருகிறது அதன் மேற்குத்திசையில் இயற்கை எழில் சிந்தும் கடலலையால் கரை கொண்டிருக்கும் நாவாந்துறை என்னும் நெய்தல் நிலப்பரப்பில் 1902ம் ஆண்டு பங்குனித்திங்கள் 4ம் நாள் அந்தோனி அண்ணாவியார் அவர்கள் வைத்தியான் மதலேனா ஆகிய இருவருக்கும் ஏக போக வாரிசாக அவதரித்தார்- அவரின் ஆரம்பக்கல்வி 3ம் ஆண்டுடன் இடை நிறுத்தப்பட்டு செய்யும் தொழிலே தெய்வம் என்னும் ஆன்றோரின் வாக்கிற்கொப்ப கடல்படு திரவியத்தின் பால் ஈற்க்கப்பட்டு கடற்றொழில் ஈடுபடலானார் .
குடும்பம்
1922ம் ஆண்டு தன் 20ம் பராயத்தில் பெற்ற அன்னை தந்தை ஆசியுடன் விக்ற்றோரியாவை திருமறை விதிப்படி மணம் முடித்துகொண்டார். பின் 1923ம் வருடம் பிறந்த இடமான நாவாந்துறை விட்டு தீவுப்பகுதிக்கு குறிப்பாய் காவலூரில் தென்திசையில் உள்ள மருத நிலப்பரப்பில் வளம் கொளிக்கும் கரம்பொன் பகுதியை சேர்ந்த மெலிஞ்சிமுனையில் குடியேறினார். 1924ம் ஆண்டு பங்குனி மாதம் 12ம் திகதி அந்தோனி-விக்ற்றோரியா தம்பதியருக்கு திரு.சவிரிமுத்து அவர்கள் ஒரே பிள்ளையாகப்பிறந்தார்.


















